-அஷ்ரப் ஏ சமத் –
”டெக்னோ சிட்டி” (விஞ்ஞான தொழில்நுட்ப நகரம் ) நேற்று (22) கொழும்பு – ஹோமகமவில் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முதலாம் கட்டத்திற்காக 20ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது. மேல்மாகண மெகா பொலிசி அமைச்சா் சம்பிக்க ரணவக்கவும், விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, உயா்கல்வி அமைச்சும் இணைந்தே இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்திற்காக தேசிய விஞ்ஞான நிலையம் 3ஆயிரம் மில்லியன் ருபா, ஆர் த சி கிளாக் மத்திய நிலையம், 5 ஆயிரம் மில்லியன் ரூபாய், மொரட்டுவை பல்கலைக்கழகம் 5 ஆயிரம் மில்லியன் ருபா , ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகம் 7,500 மில்லியன் ரூபாய், கொழும்பு பல்கலைக்கழகம் 2.096 மில்லியன் ரூபாவை முதலிட்டுள்ளது.
இங்கு உரையைாற்றிய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க
இலங்கை இந்திய ,அத்திலாந்திக், பசுபிக் சமுத்திரங்களில் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. இதனால் இலங்கை எத்துறையிலும் முன்னேறுவதுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. வியாபாரம், துறைமுகம், ஆகாய விமானம், சுற்றுலா, அனல் மின்உற்பத்தி, பெற்றோலியம், விஞ்ஞான தொழில்நுட்பம், சட்டலைட் போன்ற சகல துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு எமது நாட்டில் மனித வளம் நிறையவே உள்ளது.
இதற்காக நாம் புதிய நவீன முறையில் விஞ்ஞான தொழில் நுடபத்துறையில் உற்பத்திகளை நாட வேண்டும். அதற்கான அறிவு ஞானமும் இலங்கையா்களிடம் உள்ளது. நான் உலகின் பல பாகங்களுக்குச் சென்றாலும் அமேரிக்கா, ஜரோப்பா. அராபிய நாடுகளில் அங்கு பல துறைகளில் எமது நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்பவியலளாா்கள் உள்ளனா். அவா்கள் இனி எமது தாய்நாட்க்கு வந்து இத் துறையில் தமது அறிவை பயன்படுத்தல் வேண்டும்.
எமது நாட்டில் உயா்தரத்தில் ஆண்கள் தான் பெருமளவில் பௌதீகவியல், இரசாயனவியல் சித்தியடைகின்றனா். ஆனால் பெரும்தொகையிலான பெண்கள் கலை, வா்த்தகத்துறையில் சித்தியடைகின்றனா். விஞ்ஞான தொழில் நுட்ப நகரை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்காகவே எமது அரசில் நல்ல திறமையான அமைச்சா்களான சுசில் பிரேம் ஜய்ந்த, சம்பிகக் ரணவக்கவுடன் இந்த அமைச்சுக்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டத்தில் எமது நகரின் வாகன நெரிசல் மற்றும வீடமைப்பு , வா்தகமையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இப்போழுது முகநுால் வந்துள்ளது. 10 வருடத்திற்கு முன்பு நாம் பேஸ்புக் வரும் என நினைக்கவில்லை. அதே போன்று சட்டலைட், கையடக்க தொலைபேசி, சாரதியின்றி ஓடக் கூடிய வாகனம் போன்ற பல்வேறு புதிய தகவல் நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே நாம் நமது நாட்டில் இவ்வாறான உலக நாடுகளில் போட்டி போடக் கூடிய நவீன துறையில் எமது நாட்டின் விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிநுட்பம் எந்தத் துறையினை அபிவிருத்தி செய்தால் எமது நாட்டினை நோக்கி அரபிய இந்தோனிசிய நாடுகள் எம்மை நோக்கி வருவாா்கள் என பிரதம மந்திரி அங்கு உரையாற்றினாா்.