20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஊடக பிரதி அமைச்சர், சாந்த பண்டார தெரிவித்ததாவது;
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அதனை நிறைவேற்றாதிருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதனால் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமாகக் கொண்டு வந்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சிறு அரசியல் இலாபங்களுக்காக அதனை நிறைவேற்றாதிருக்க சிலர் முயற்சிக்கின்றனர். இது அநீதியான செயற்பாடாகும்.
என்றார்.