Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்

கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான 20வது திருத்த சட்டம் தொடர்ப்பான ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கிகாரத்திற்காக முன்வைக்கப்பட இருக்கின்ற யோசனையை தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு வன்மையாக நிராகரிக்கின்றது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம். முகைதீன் தெரிவித்துள்ளார்.

இன்று கூட்டமைப்பின் தலைவர் வி. ஆனந்த சங்கரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இதற்து எதிராகவும் வாக்களிக்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறுபான்மை மக்களின் தேசிய குடிசன விகிதாசாரத்திற்கு ஏற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதற்கமைய
சிறுபான்மை மக்களை பாதிக்காத வகையில் தேசிய இன விகிதாசாரத்தை அடிப்டையாகக் கொண்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அடங்கிய யோசனையை தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உனைஸ் பாரூக் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

அந்த யோசனை சம்பந்தமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வேண்டுகோளை கடந்த மே மாதம் 08ம் திகதி கோரியிருந்தும், இற்றவரைக்கும் எமக்கு எந்த விதமான அழைப்பும் கிடைக்கவில்லை என்பது மனவருத்தமான விடயமாகும் என்ற செய்தியினை ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் எங்களுடைய கோரிக்கை இலங்கையில் வாழும் சகல இன மக்களின் தேசிய குடிசன விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் தேர்தல் மறுசீரமைப்பு உத்தரவாதப் படுத்தப்படுத்தபட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைபாடாகும் என்றும் தெரிவித்தார்.

Related Post