Breaking
Tue. Mar 18th, 2025

20ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அப்படி இருக்கையில் அமைச்சரவையில் இதற்கு இடையூறு ஏற்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தேரர் தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தத்தை நிறைவேற்றாது பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப்பட மாட்டதெனவும் முடிந்தால் பாராளுமன்றை கலைத்துக் காட்டுமாறு தேரர் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சவால் விடுத்தார்.

Related Post