Breaking
Mon. Dec 23rd, 2024

அஷ்ரப் எ சமத்

கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தின் போது இருப்பிடம், சொத்து, சுகங்களை எல்லாம் இளந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வரும் இக்காலத்தில் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் கடந்த அரசால் இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வந்தன.

அந்த வகையில் இன்று இலங்கையில் நல்லாட்சி மலர்ந்திருக்கும் இவ்வேளையில் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அவர்களின் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கில் 55 காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலக உப செயலாளர் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம். அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண காணி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பிட்ட காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று 27 மாலை 4 மணிக்கு கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post