Breaking
Thu. Jan 16th, 2025

கடந்த ஆண்டு முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகளில் 20 சதவீதமான பால்மாக்களில் டீசிடீ இரசாயன  நச்சுப் பொருள் கலந்துள்ளதாக   தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் 84 ஆயிரம் மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த வருடத்தில் 6,000 மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தினால் டீ.சி.டீ பரிசோனை செய்யப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post