நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணக் கோவைகள் (பைல்கள்) காணாமல் போயுள்ளன.
அண்மையிலும் சில பைல்கள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி ஆவணக் கோவைகளை கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
திருடர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.