மொரகஹாகந்த, களுகங்கை பிரதேசத்தில் செயல் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை மாணிக்ககல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தனது அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளார்.
சுற்றாடல் ஜனநாயகத்திற்கான மக்கள் விவாதம் இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மொரகஹாகந்த பகுதியில் 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், குறித்த பிரதேசத்தில் மாணிக்ககல் அகழ்வதற்கான அனுமதியினை வழங்க கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இரு உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு இந்த பிரேரணையைக் கொண்டு வந்து, அனுமதியினை பெற்றனர். இது தொடர்பாக தான் பதவி விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.
அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஒரு வருடங்கள் ஆகிவிட்டன. சுகாதார அமைச்சராக இருந்த எனக்கு, அதற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ள முடியாமல் போனது.
ஜனாதிபதியும் பெரும்பாலான அமைச்சர்களும் அதற்கு சாதகமாக செயல்பட்டதனால், என்னால் அதற்கு எதிராக செயல்பட முடியாமல் போனது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மொரகஹாகந்த, களுகங்கை பிரதேசங்களில் காணிகளை வாங்கி மாணிக்க கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
25 ஏக்கர் 50 ஏக்கர் வரை இவர்கள் காணிகளை சுவீகரித்து மாணிக்க கல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடாக இயந்திரங்களை உபயோகித்து மாணிக்கக்கல் அகழ்வது இவர்கள் நோக்கமாக இருந்ததாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.