Breaking
Fri. Jan 10th, 2025
அஷ்ரப் ஏ சமத் 
2010 ஐ போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் பைரூஸ் ஹாஜியார் பணிவான வேண்டுகோள்…
கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது.
குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற  எனக்கு கிடைத்த அதே கசப்பான அனுபவம் அதே ஆண்டில் ஹஜ் கடைமைக்காக சென்ற சகலருக்கும் கிடைத்ததை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.இதற்கு அவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற அனைவரும் சான்று பகர்வார்கள் என  மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியா கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்துள்ளார்..
இன்று  ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்……..
இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு ஹஜ் கமிட்டி பொறுப்பு தற்போதைய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த ஆண்டில் முழு இலங்கைக்கான ஹாஜிகளும் ஒரே இலக்க முஹல்லிமில் கீழே பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததனால் குறித்த ஹஜ் கடமையில் நாம் என்னற்ற சிரமங்களை சந்தித்தோம். 4500 பேருக்கு ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தில் 5800பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இதனால் பலர் நிலத்திலும் கதிரைகளைலிலும் படுத்துரங்கினர். உணவு,மலசலகூட வசதிகள்,போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன முறையாக செய்யப்படவில்லை.எமக்கு வழங்கப்பட்டிருந்த கூடாரம் ஒரு அகதிமுகாமாக காட்சியளித்தது. இதன் உச்சகட்டமாக மினாவில் தங்க இடம் இன்றி மலசல கூட வாசலில் நான் படுத்துறங்கினேன். எனக்கு இந்த நிலைமை என்றால் எதுவித அரசியல் பின்னணிகளும் அற்ற ஹாஜிகளின் நிலைமையை பற்றி உங்களால் ஒரு ஊகத்துக்கு வரமுடியும்.
லட்சக்கனக்கான ரூபாய் செலவு செய்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற ஹாஜிகள் தங்களுக்கு சரியான தங்குமிடம் கிடைக்காததால் அந்த புனித இடத்திலும் சண்டை இட்டுக்கொண்டனர். அது தவிர ஹஜ் முகவர்களுக்கும் ஹஜ் குழுவினர்களுக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது.
இவ்விடயத்தை எமக்கு பொறுப்பு வழங்கப்பட்ட முஹல்லிம்களிடம் முறையிட்ட போது நாங்கள் கட்டிய பணத்துக்கு இவ்வளவு வசதிகளை மட்டுமே வழங்கமுடியும் என குறிப்பிட்டனர். நாம் அது தொடர்பாக தீர விசாரித்த போது நாம் செலுத்திய தொகையில் ஒரு பகுதி எதோ ஒரு தரப்புக்கு கமிஷனாக சென்றுள்ளது.அவர்கள் எமக்கு குறிப்பிட்ட கமிசன் தொகை பிரகாரம் சுமார் இருபது லட்சம் ரியால்கள் கமிசன் ஒரு தரப்புக்கு சென்றுள்ளது இதன் இலங்கை ரூபாய் மதிப்பு எட்டுகோடிக்கும் அதிகமாகும்.
2010 ம் ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற நான் அனுபவித்த கஷ்டங்கள் (மினாவில் தங்க இடம் இன்றி மலசல கூடத்தின் வாசலில் படுத்து உறங்கிய அனுபவம் உற்பட) அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் முறையிட்டதுடன் ஹாஜிகள் தங்கவைக்கப்பட்டவிதம் குறித்த வீடியோ ஆதரங்களையும் அனுப்பிவைத்திருந்தேன். அப்போதைய அமைச்சர் பவுசி ஆளுனர் அளவி மவ்லானாஉற்பட பலரிடம் இது தொடர்பாக மிக கடுமையாக முறையிட்டிருந்தேன்.
அதன் பின்னர்  ஹஜ் கமிட்டி பொறுப்பு வழங்கப்பட்டிருந்தவர்கள் அப்பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இன்று  ஜனாதிபதி மைத்ரியில் நல்லட்சியில் இலங்கை ஹஜ் வரலாற்றில் கருப்பு புள்ளியாக வரலாற்றில் இடம்பெற்ற இரண்டாயிரத்து பத்து ஹஜ் கமிட்டி பொறுப்பு வழங்கப்பட்டிருந்த அதே  நபர்களின் பெயர்கள் மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் கலாசார அமைச்சின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
மீண்டும் அவர்களுக்கே  இப்புனித கடமை பொறுப்பு வழங்கப்பட்டால் மக்கள் மத்தியில் நல்லாட்சி தொடர்பாக இருக்கும் நம்பிக்கை நிலைத்திருப்பது சந்தேகமே……
பைரூஸ் ஹாஜியார்
மேல் மாகாண சபை உறுப்பினர்.

Related Post