அஸ்ரப் ஏ சமத்
இலங்கையில் மட்டும் 2014ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2160 சிறுவர்கள் தாக்குதலுக்காகிசித்திரவதை செய்த சம்பவங்களும் சிறுவர் பாதுகபாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது.
என இன்றுசிறுவர் பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர் ரோசிசேனாநாயகக்க இன்றுஅமைச்சில் நடைபெற்றநிகழ்வில் தெரிவித்தார். 2015 ஏப்ரல் 30ஆம் திகதியை நாடு முழுவதிலும் சிறுவர்களது பாலியல் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்.என்ற திட்டத்தில் சிறுவர் விவகார அமைச்சும் யுனஸ்கோ நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை இலங்கை உள்ள சகல சமுகத்திற்கும் விழிப்பூட்டும் முகமாக பெருவிரல் ஒப்பமிட்டு இந் திட்த்தினைஆரம்பித்து வைத்தனர்.
இத்திட்டத்திற்காகசிறுவர்கள் சம்பந்தமாக கல்வியமைச்சு, சுகாதாரஅமைச்சு, ஊடகஅமைச்சு சிறுவர் பாதுகாப்பு அமைச்சு நீதிஅமைச்சு ஆகியன இணைந்து யுனஸ்கோ நிறுவனமும் இத்திட்டத்தினை அமுல்படுத்துகின்றன. இத்திட்டம் சம்பந்தமாக ஊடகங்கள் ஊடகாவும்,பாடசாலைஊடகாவும் வீதி நாட்டியம்,ஓவியம்,கட்டுரை,மேடை நாடகங்கள் ஊடாக விழிப்பூட்டு சிறுவகளுக்கு இழைக்கும் இம்சைகள்,சித்திரவதை,தாக்குதல்கள் சம்பவங்களை தடுத்துநிறுத்துவதே இத் திட்டத்தின் நோக்கம் என சிறுவர் சம்பந்தமானஅமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.