Breaking
Mon. Dec 23rd, 2024

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை முறைகள் மற்றும் திகதிகள் கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன.
அவ்வகையில் அனைத்து தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கும் முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியளவில் முதல் தவணைக்காக பாடசாலை மூடப்படும்.

அதனையடுத்து அனைத்து சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், இரண்டாம் தவணைக்கான விடுமுறைக்காக பாடசாலைகள் ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விடுமுறைக்காக டிசம்பர் மாதம் 02 ஆம் திகதியளவில் மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரையுள்ள காலத்தில் முதலாவது பிரிவாக நடைபெற்று, அதன் பின்னர் ஜூன் மாதம் 06 ஆம் திகதி முதல் ஜூலை 06 ஆம் திகதி வரையில் ரமழான் பெருநாளுக்காக மூடப்படும்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் தவணைக்கான இரண்டாம் பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதியளவில் மூடப்படும். மூன்றாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதியுடன் மூடப்படுமெனவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

By

Related Post