Breaking
Mon. Dec 23rd, 2024

01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05)

2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டமானது, பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஏதேனும் நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் குறித்த காரியாலயத்திற்கு இருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சட்டத்தின் 11 பிரிவின் (அ) உறுப்புரையினை அகற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபொன்றை மேற்கொள்வதற்காக வேண்டி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை கருத்திட்டத்திற்காக குழந்தை பிரசவ மற்றும் மகப்பேற்றியல் உசாவுகை நிலையத்தினை தாபித்தல் (விடய இல. 10)

டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை கருத்திட்டத்திற்காக குழந்தை பிரசவ மற்றும் மகப்பேற்றியல் உசாவுகை நிலையத்தினை தாபிப்பதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி Credit Agricole Corporate and Investment Bank of France  மற்றும் இலங்கை ஹட்டன் நெசனல் வங்கி ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. வட மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படை வேலைத்திட்ட செயற்பாடுகளுக்காக வேலைத்திட்ட திட்டமிடலுக்கான முற்பண கடனை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 08)

வட மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்தின் 40,000 குடும்பங்கள் நன்மையடைய உள்ளனர். இத்திட்டத்தின் அடிப்படை வேலைத்திட்ட செயற்பாடுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பண கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் (விடய இல. 09)

கிராமிய அபிவிருத்தியினை மேற்கொள்ளும் பொருட்டு 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஒஸ்ரியா ஆகிய அரசாங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக வேண்டி இனங்காணப்படுகின்ற ஐக்கிய இராஜ்யத்தின் வழங்குநர்களுக்கு குறித்த ஒப்பந்தத்தின் 85% க்காக நேரடி நிதிவசதிகளை அந்நாட்டு திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு முடியும் என இந்நாட்டு பிரித்தானியாவின் தூதுவராலயம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 50 மில்லியன் பிரித்தானிய பவுன் பெறுமதியான கிராமிய பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக, குறித்த நிர்வனங்களின் இருந்து விலை மனுக்கோரலை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. ஐக்கிய அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 10)

Strengthened Partnership for Democratic Reform & Socila Integration  மற்றும் Increased Equitable Economic Growth and Public Financial Management ஆகிய வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்காவுடன் 2011 மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குவதற்கு இணங்கிய நிதியினை அதிகரிப்பதற்கு தற்பொழுது இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கு தொடர்பில தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

06. இலங்கையில் கமத்தொழில் பிரிவை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கையில் மறுசிரமைப்பு செயற்திட்டத்தை பலப்படுத்தல் (விடய இல.11)

இலங்கையில் கமத்தொழில் பிரிவை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கையில் மறுசிரமைப்பு செயற்திட்டத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டம்’ செயற்படுத்துவதற்காக வேண்டி முறையே 30 மில்லியன் யூரோ மற்றும் 14.5 மில்லியன் யூரோ நிதியினையும் வழங்குவதற்கு ஐரோப்பிய சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஐரோப்பிய சங்கத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. பூ வளர்ப்பின் மூலம் உயர் வாழ்க்கை தரத்தை உருவாக்குவதற்காக பயிர் செய்கையாளர்களை பலப்படுத்தல் (விடய இல. 12)

பூ வளர்ப்பின் மூலம் 2015ம் ஆண்டில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களமானது மாவட்ட மட்டத்தில் பூ செய்கை அபிவிருத்தி செயற்பாட்டில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதுடன், இதுவரை 17 மாவட்டங்களில் 173 சங்கங்கள் அமைக்கப்பட்டு குறித்த செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இப்பயிர் செய்கை வேலைத்திட்டத்தில் உள்ளடக்கி, பூ வளர்ப்புத் துறைக்கு தேவையான அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப தகவல்கள், உயர் வளர்ப்பு திரௌவியங்கள், வளர்ப்பு பயிற்சி மற்றும் விநியோக உதவிகளை வழங்கி, சிறு மற்றும் மத்திய தர பூ வளர்ப்பாளர்களை, விசேடமாக பூ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்களை வளப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பூ வளர்ப்பு துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, 228.5 மில்லியன் மதிப்பீட்டு செலவில் 2017-2021 காலப்பிரிவில் செயற்படுத்துவதற்கு தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. உயர் கல்வி வேலைத்திட்டம் மற்றம் அபிவிருத்தியினை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் (AHEAD) (விடய இல. 14)

உயர் கல்வித்துறையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பல்வேறு நோக்கங்களை அடைந்துக் கொள்ளும் நோக்கில், ‘உயர் கல்வி வேலைத்திட்டம் மற்றம் அபிவிருத்தியினை துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை’ (யுர்நுயுனு) உலக வங்கியின் நிதியுதவியுடன், 06 வருட காலத்தினுள் செயற்படுத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை வைத்தியசாலைகளில் காணப்படும் தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 17)

இலங்கை வைத்தியசாலைகளில் காணப்படும் தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணங்களில் காணப்படும் வைத்தியசாலைகளில் காணப்படும் தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான பணியினை மேற்கொள்ளம் இயந்திர அறையொன்றை நிர்மாணித்து, முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. களனி, வெதமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ‘தசசில் மாதா’ ஆராமய அமைந்துள்ள காணியினை, ‘தசசில் மாதா’ ஆராமயவிற்கே பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 22)

களனி, வெதமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ‘தசசில் மாதா’ ஆராமய அமைந்துள்ள 7.56 பேர்ச்சஸ் காணியினை, ‘தசசில் மாதா’ ஆராமயவிற்கே பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. மகாவலி இடக்கரைத் தாழ் பள்ளத்தாக்கு விருத்திக் கருத்திட்டம் (விடய இல. 25)

திருகோணமலை மாவட்டத்தின் கின்னியா மற்றும் கந்தலாய் ஆகிய பிரதேச செயலக பிரதேசத்தையும், பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலக பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில், 4,000 ஏக்கர் காணிக்காக சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் நீரினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 6,250 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ‘மகாவலி இடக்கரைத் தாழ் பள்ளத்தாக்கு விருத்திக் கருத்திட்ட’ செயற்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 1961ம் ஆண்டு 29ம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 26)

மக்கள் வங்கியின் செயற்பாட்டினை பலப்படுத்தும் நோக்கில் 1961ம் ஆண்டு 29ம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தின் 12,20,21 மற்றும் 43ம் உறுப்புரைகளை திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் அரச தொழிற் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நிர்மாண பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்களை திருத்தம் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி (விடய இல. 29)

நிர்மாண பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்களை திருத்தம் செய்வதற்கான தொழில்நுட்பவியலாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் நன்மதிப்புண்டு. இதனடிப்படையில் குறித்த தரத்தில் தொழில்நுட்பவியலாளர்களை பயிற்றுவிக்கும் 03 வருட முழுநேர பயிற்சி நெறியொன்றை (NVQ – 04 மட்டத்தில்) நடத்துவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. காலி துறைமுகத்தில் பாரிய கப்பல் நங்கூரமிடும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 30)

காலி துறைமுகத்தில் பாரிய கப்பல் நங்கூரமிடும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் உள்ள தகுதியான முதலீட்டாளர் ஒருவரை இனங்காண்பதற்காக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சின் அடிப்படையில் ‘Swiss Challenge’ ‘ செயன்முறையினை பயன்படுத்தி விலை மனுக்களை கோருவதற்கு துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. துன்புறுத்தலினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்குப் பாதுகாப்பைச் செய்து கொடுப்பதற்கான தற்காலிக அரவணைப்பு நிலையங்களை நிருவகித்தல் (விடய இல. 31)

அநுபவம் நிறைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் துன்புறுத்தலினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்குப் பாதுகாப்பைச் செய்து கொடுப்பதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தற்காலிக அரவணைப்பு நிலையங்களை நிருவகிப்பதற்கும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிருவகிக்கப்படுகின்ற கொழும்பு மற்றும் மாத்தறை தற்காலிக அரவணைப்பு நிலையங்களை நிருவகிப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை வழங்குவதற்கும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16.சட்டமும் ஒழுங்கும் பற்றிய சார்க் செயலாளர்களின் 8 ஆவது கூட்டம் மற்றும் சார்க் குடியமர்வு அதிகாரிகளின் கூட்டத்தினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 32)

சட்டமும் ஒழுங்கும் பற்றிய சார்க் செயலாளர்களின் 8 ஆவது கூட்டம் மற்றும் சார்க் குடியமர்வு அதிகாரிகளின் கூட்டத்தினை இலங்கையில் நடாத்துவதற்கும் அதற்கான தலைமைத்துவத்தை இலங்கை வழங்குவதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மஹவ இலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதை மறுசீரமைப்பிற்காக உசாக்கையர் சேவையைப் பெறுதல் (விடய இல. 34)

மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை மறுசீரமைப்பிற்காக உசாக்கையர் சேவையைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயற்படுத்தல் – நெடுந்தொலைவிலுள்ள ஏற்றிடம் மற்றும் நடையோடுபாதைகள் வேலைத்திட்டம் (விடய இல. 35)

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் நெடுந்தொலைவிலுள்ள ஏற்றிடம் மற்றும் நடையோடுபாதைகள் வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. துறைமுக அணுகுகைக்கான தூண்களின் மேல் நிறுவப்படும் நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் விரிவான வடிவமைப்புக்கான ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை அளித்தல் (விடய இல. 36)

துறைமுக அணுகுகைக்கான தூண்களின் மேல் நிறுவப்படும் நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் விரிவான வடிவமைப்புக்கான ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர் பெறுகைக் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் உடல் நல கருத்திட்டம் – ஆலோசனை ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திருத்தியமைத்தல் (விடய இல. 37)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் உடல் நல கருத்திட்டத்தின் ஒப்பந்தக்காரரின் நிர்வாகத்துக்கு புறம்பான காரணங்களினால் ஆலோசனை ஒப்பந்தம் மீதேற்பட்ட மாற்றங்கள் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. வைத்தியசாலைகளுக்கு தேவையான டெபரஸிரொக்ஸ் மாத்திரைகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 38)

வைத்தியசாலைகளுக்கு தேவையான டெபரஸிரொக்ஸ் மில்லிகிராம் 400 இன் குடிசைகள் 1,250,000 கொள்வனவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள விலைமனுக்களில் இருந்து அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் அறிக்கையின் படி தெரிவு செய்யப்பட்ட விலைமனுவுக்கு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் பெவசியுமெப் இன்ஜக்சன்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 40)

புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் பெவசியுமெப் இன்ஜக்சன் 100அபஃ4அட குப்பிகள் 3,750 இனை கொள்வனவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள விலைமனுக்களில் இருந்து அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழுவின் அறிக்கையின் படி தெரிவு செய்யப்பட்ட விலைமனுவுக்கு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. களுத்துறை மாவட்டத்தின் ரைகம நகரில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபித்தல் (விடய இல. 41)

களுத்துறை மாவட்டத்தின் ரைகம நகரில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக அவ்வலயத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை சாதாரண கொள்முதல் செயன்முறைக்கு புறம்பாக, அரச நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் உப கம்பனியான மத்திய பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. சிலோன் பெற்றோலியம் ஸ்டொரேஜ் டேர்மினல்ஸ் லிமிடட் கம்பனியின் தரவு நிலையத்திற்கான அனர்த்த மீட்புத் தீர்வை (DRS – Disaster Recovery Solution) நடைமுறைப்படுத்தல் (விடய இல. 44)

சிலோன் பெற்றோலியம் ஸ்டொரேஜ் டேர்மினல்ஸ் லிமிடட் கம்பனியின் தரவு நிலையத்திற்கான அனர்த்த மீட்புத் தீர்வை (DRS – Disaster Recovery Solution) நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. ஐரோப்பிய யூனியனின் பொது வரவு செலவுத்திட்டத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட கருத்திட்டத்தை பங்குடமை நாடுகளினால் விதிக்கப்படும் வரி மற்றும் சுங்க தீர்வைகள் தொடர்பான உடன்படிக்கை (விடய இல. 46)

1975ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் உத்தியோகபூர்வ உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசாங்கத்திற்கு 220 மில்லியன் ஐ.அ.டொலர்கள் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளது. 2014இல் இருந்து 2020 வரையான காலப்பகுதிக்கு 210 மில்லியன் யுரோக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இத்தொகையில், 72 மில்லியன் யூரோவானது 03 கருத்திட்டங்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியுதவியானது அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற தீர்வை வரி, வரி மற்றும் வேறு நிதி வரிகளை செலுத்துவதற்கு பயன்படுத்த முடியாது. அதனடிப்படையில் ஐரோப்பிய யூனியனின் பொது வரவு செலவுத்திட்டத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட கருத்திட்டத்தை பங்குடமை நாடுகளினால் விதிக்கப்படும் வரி மற்றும் சுங்க தீர்வைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான விசேட வியாபார பண்ட அறவீட்டினை விலக்களிப்புச் செய்தல் (விடய இல. 48)

சந்தையில் அரிசி விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்தி, உள்ளூர் சந்தைக்கு தேவையான அரிசியினை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், இறக்குமதி அரிசி ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்படுகின்ற 15 ரூபா விசேட வியாபார பண்ட அறவீட்டு வரியினை, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 05 ரூபா வரை குறைப்பதற்கு 2007ம் ஆண்டு 48ம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள நியமங்கள் அடங்கிய, 2003 / 43 இலக்கமுடைய 2017-01-27ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகியவில் களஞ்சியசாலைத் தொகுதி நிர்மாணித்தல் (விடய இல. 49)

விவசாயிகளுக்கு உயர் தர நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிளிநொச்சி, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் களஞ்சியசாலைகள் 03 இனை அமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைடிப்படையில், பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 28,500 சதுர அடி அளவிலான களஞ்சியசாலை தொகுதியினை நிர்மாணிப்பதற்கும் மற்றைய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. அதிபர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவில் திருத்தம் செய்தல் (விடய இல. 51.26)

நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் வெற்றிகரமான முறையில் நிர்வகிப்பதில் அதிபர்கள் படும் துயரங்களை கவனத்திற் கொண்டு அதிபர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. ஆசிரிய ஆலோசகர் சேவையை ஸ்தாபித்தல் (விடய இல. 51.27)

ஆசிரிய ஆலோசகர் பதவியானது 1962ம் ஆண்டு இந்நாட்டு பாடசாலை தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவர்கள் பாடசாலை கல்வி தரத்தினை மேம்படுத்துவதற்கு பாரியளவு பங்களிப்பினை செலுத்தி வருகின்றனர். இச்சேவையினை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘ஆசிரிய ஆலோசகர் சேவை’ எனும் புதிய சேவையொன்றை ஆரம்பிப்பதற்கும், தற்போது ஆசிரிய ஆலோசகர்களாக சேவையாற்றுபவர்களை குறித்த சேவையில் இணைத்துக் கொள்வதற்குமாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு இடையில் விளையாட்டின் மேம்பாட்டின் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 53)

விளையாட்டுத் துறையில் இரு நாடுகளினாலும் பெற்றுக் கொள்ளப்பட்ட விசேட வெற்றிகளுடன் கூடிய துறைகளை இனங்கண்டு, அதனூடாக இரு நாட்டு விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு இடையில் விளையாட்டின் மேம்பாட்டின் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விளையாட்டு அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

By

Related Post