Breaking
Tue. Dec 24th, 2024

பிரான்ஸ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 66 மில்லியனாகும். .இதில் 6 மில்லியன் முஸ்லிகள் இருப்பதாக ஒரு குறிப்பு உறுதி செய்கிறது.

மேலும், பிரான்ஸில் இஸ்லாத்தை புதிதாக ஏற்போர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பிரான்ஸில் அசுர வேகத்தில் உயரும் என்றும் அறியமுடிகிறது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரன்ச் நாவல் ஆசிரியர் மைக்கேல் ஓபக் கூறியுள்ளார்.

2022 பிரானஸ் இஸ்லாமிய நாடாக வாய்ப்புள்ளது என்ற கருத்தை மையமாக கொண்டு பிரன்ச் மொழியில் அவர் ஒரு நாவல் எழதியுள்ளார்.

அந்த நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பட்டதை தொடர்ந்து கிருத்துவ உலகில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

இது பற்றி அந்த நாவல் ஆசிரியர் கூறும் போது:-

“ஐரோப்பாவில் அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருவது எனக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியிறது. எனவே இந்த அச்சத்தை மக்களிடம் கொண்டு சென்று மக்களிடையே விழிப்புணர்சியை உருவாக்குவதே என நோக்கம்” – எனவும் கூறியுள்ளார்

அவருக்கு இஸ்லாத்தின் மீது பற்றோ பாசமோ இல்லை என்றாலும், ஐரோப்பாவில் உருவாகியுள்ள இஸ்லாமிய எழுட்சி அவரை நடுங்க வைத்திருப்பதால் அவர் உண்மை வெளிபடையாக போட்டு உடைத்துள்ளார்.

Related Post