உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டிவிடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த சமயத்தில ஆசிய நாடுகளின் மக்கள் தொகை 5.30 கோடியாக இருக்கும். ஆப்பிரிக்கா நாடுகளின் மக்கள் தொகை 250 கோடியாக உயர்ந்திருக்கும்.
அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை 72 கோடியாக உயர்ந்திருக்கும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பங்களிப்பு 6.6 கோடியாக இருக்கும் என்று ஆய்வுத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
2050-ம் ஆண்டில் சில நாடுகளில் மக்கள் தொகை உயர்வு சதவீதம் மிக,மிக குறைவாக இருக்கும். ஆனால் ஆசிய நாடுகளில்மட்டும் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும்.
2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு பாதி ஆசிய நாடுகளில்தான் இருக்கும். அதிலும் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு, மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.