Breaking
Fri. Nov 15th, 2024
2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!
2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் ‘ஆய்வு’ முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ‘உலக மதங்களின் எதிர்காலம்’ என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும்.
உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
PEW RESEARCH CENTER அறிவிப்பு
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு சொல்ல தக்க விதத்தில் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தின் வளர்ச்சி அமெரிக்காவில் விரைவாகி கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுத்து விடும். அமெரிக்காவின் சிறுபாண்மை மதங்களில் ஒன்றாக கிருத்துவம் சுருங்கி விடும் என்று வாஷிங்டெனில் இயங்கும் ஆய்வு நிறுவனம் PEW RESEARCH CENTER தனது ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டிருப்பது அமெரிக்கர்களிடையே பரபரப்பை உருவாக்கி இருக்கறது.
இறை மறுப்பாளர்கள் சத்தியத்தின் ஒளியை தாங்கள் வாய்களால் ஊதி அணைக்க முயல்கின்றனர் இறைமறுப்பாளர்கள் விரும்பவில்லை என்றாலும் இறைவன் தனது மார்கத்தை முழுமையாக்கியே தீருவான்என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும்விதமாக இந்த ஆய்வு அமைகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

By

Related Post