23.2 கிலோகிராம் (51 இறாத்தல்) எடையுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்டனில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்குப் பிராந்தியமான கோர்ன்வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்பவர் இந்த கோவாவை அறுவடை செய்துள்ளார்.
வோர்செஸ்டஷயர் பிராந்தியத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பிரித்தானிய தேசிய பாரிய மரக்கறி போட்டிகளில் இந்த கோவா காட்சிப்படுத்தப்பட்டது.
உலகின் மிகப் பெரிய கோவா எனும் 90 வருடகால சாதனையை இந்த கோவா முறியடித்துள்ளது. இதற்குமுன் 1925 ஆம் ஆண்டு அறுவடை செய்யப்பட்ட 19.05 கிலோ எடையுள்ள கோவாவே இதுவரை சாதனைக்குரியதாக இருந்தது.