Breaking
Fri. Mar 21st, 2025

23000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விசேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் காணப்படும் சுமார் 10,000 பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

பாடசாலை கட்டமைப்பை உரிய முறையில் மேற்கொள்ள இந்த ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கிரமமான முறையில் இந்த ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post