Breaking
Mon. Dec 23rd, 2024

நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை தன்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வீட்டுப் பிரச்­சி­னை­களை கண்­டறிய ஒவ்­வொரு பிர­தேச மாவட்ட மட்­டத்தில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் நாளொன்­றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இல்­லாது பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றன. இந்­தப் ­பா­ரிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான மிகப்­பெரும் பொறுப்பை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் என்­னிடம் ஒப்­ப­டைத்­துள்ளனர்.

எனது தந்தை மறைந்த ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாஸ இந்த நாட்டில் 10 இலட்சம் வீடுகள், 15 இலட்சம் வீடுகள் அமைப்­ப­தற்­கான திட்­டங்­களை நாடு­ முழுவதும் முன்­னெ­டுத்­தி­ருந்தார். குறிப்­பாக கிர­ாமோ­தயம், செவன வீட­மைப்புத் திட்டம், கம் உதாவ போன்ற வீட­மைப்புக் கிரா­மங்­களை உரு­வாக்­கினார். அத்­துடன் 2000 ஆம் ஆண்­ட­ளவில் யாவ­ருக்கும் புக­லிடம் என்ற இலக்கை நோக்கிச் சென்றார்.

ஆனால் அவர் மறைந்த பின்னர் அந்த இலக்கை அதன் பின் வந்த வீட­மைப்பு அமைச்­சர்­களால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. தற்­பொ­ழுது நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை என்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ளனர்.

100 நாள் வேலைத்­திட்­டத்தில் நான் வீட­மைப்பு அமைச்­சினை பார­மெ­டுத்து கடந்த 6 மாத­கா­லத்­திற்குள் 35ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. அடுத்த டிசம்பர் மாதத்­திற்­குள் அவ்­வீ­டு­களின் நிர்­மா­ணப்­ப­ணிகள் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்டு மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும். செவன என்ற திட்­டத்தின் கீழ் மறைந்த ஜனா­தி­ப­தியின் வீட­மைப்­புத்­திட்­டங்கள் என்னால் முன்­னெ­டு­க்கப்­ப­ட­வுள்­ளன. எனது அமைச்சின் அதி­கா­ரிகள் என்­னோடு ஒத்­து­ழைத்து மக்­க­ளது வீட்­டுப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உதவ வேண்டும்.

இந்த அமைச்சில் அரச சொத்­துக்கள் துஸ்­பி­ர­யோகம், மக்­களை அலைக்­க­ளித்தல் போன்ற செயல்­க­ளுக்கு ஒரு­போதும் இடம் அளிக்­கப்­பட மாட்­டாது. கடந்த 100 நாள் அரசில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீனின் கட்­சி­யினைச் சேர்ந்த அமீர் அலி பிர­தி­ய­மைச்­ச­ராக என்­னுடன் இணைந்­தி­ருந்தார். அவ­ருடன் இணைந்து அமைச்சின் வேலைத்­திட்­டங்­களை எவ்­வித தடங்­க­லு­மின்றி முன்­னெ­டுத்தேன்.

தற்­போது ஸ்ரீல.சு.கட்­சியின் இந்­திக்க பண்­டார பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்த தேசிய அர­சியல், கட்சி, நிறம், மதம், இனம், பாகு­பா­டின்றி சகல இன மக்­க­ளுக்­கு­மான சேவைகள் முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய ஒவ்வொரு பிரதேச மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிலைப்படுத்தி பல்வேறு வீடமைப்பு வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் நடை முறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.

Related Post