Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

ஜக்கிய நாடுகள் அமையத்தினால் வருடா வருடம் அக்டோபா் 5 ஆம் திகதியில் பிரகடனப்படுத்தியுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு நாடுபூராவும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் தமது வீடுகளின் சுவா்களை பூசிக் கொள்ள முடியாமல் உள்ள 25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்துவதற்கென கடந்த வாரம் 250 மில்லியன் ருபா நிதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளன. என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்

 (28)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்

இந் நிகழ்வில் பிரதியமைசச்சா் இந்திக்க பண்டார, அமைச்சின் செயலாளா் டப்ளியு அத்துக்கோரல, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பலன்சூாிய ஆகியோறும் கலந்து கொண்டனா்.
இங்கு தொடா்ந்து கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாச –

செப்டம்பா் 28ஆம் திகதி முதல் டிசம்பா் 31ஆம் திகதி வரை உலக குடியிருப்பு வாரம், மாதங்கள் நாடு பூராவும் அனுஸ்டிக்கப்படும். இத்தினத்தில் வீடமைபப்புக்கிராமங்கள்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான வீட்டுரிமைப்பத்திரம்வழங்குதல், 20 ஆயிரம் சிறுவா்களை ”பொதுஇடங்கள் யாவருக்கும்” என்ற தொணிப்பொருளில் சித்திரக் கண்காட்சி, வீதி நாடகம், கட்டுரைப்போட்டி போன்ற நிகழ்வுகள் 24 மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்படும்.

மேலும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில்
வட கிழக்கில் தேசிய வீடமைப்பு வீடுகளில் வாழும் மக்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் வழங்கல், தொடா்மாடி வீடுகள் புனா்நிர்மாணம் செய்தல், வீட்டுரிமையாளா்கள் சங்கங்கள் 1000 பேர்களைக் கொண்டு தொடா்மாடி வீடுகளில் வசிப்போருக்கான பயிற்சி அளித்தல் ஆகிய நிகழ்ச்சித்திட்டங்கள் நடைபெற உள்ளன.

பிரதான நிகழ்வு ஒக்டோபா் 5ஆம் திகதி மாளிகாவத்தை பிரதேசத்தில் நடாத்தப்படும் இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்வாா். இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொள்வாா்.

கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்ட 50ஆயிரம் வீடுகளில் இதுவரை 35ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவைகள் மக்களிடம் கையளிக்கப்படும்.

ஒக்டோபா் 5ஆம் திகதி உலக குடியிருப்பு பிரதாண வைபவம் 06ஆம் திகதி சிறுவா் தினம், 7ஆம் திகதி இளைஞா் தினம், 8ஆம் திகதி மக்கள் தினம், 9ஆம் திகதி வீட்டாதான தினம், 10ஆம் திகதி சிரமாதான தினம், 11 வீடமைப்பு அபிவிருத்தி தினம், 12ஆம் திகதி உலக குடியிருப்பு இறுதி நாள் நிகழ்வுகள் ஆகியன நடைபெற உள்ளன. என இவ் ஊடக மாநாட்டில் அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

Related Post