Breaking
Mon. Dec 23rd, 2024
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.
இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், காங்கேசன்துறை வீதி வழியாக குறுகிய நேரத்தில் போக்குவரத்து செய்யக்கூடியதாக காணப்படுவதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, விரைவில் காங்கேசன்துறை புகையிரத நிலையமும் மக்கள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

By

Related Post