Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

“நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை கைத்தறித்துறை ஒரு பின்னடைவை எதிர்கொண்டதுடன் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும், பல அரசு முயற்சியாளர்கள் வெற்றிகரமாக இந்த துறைகளை புதுப்பித்துள்ளன. இன்று, பல இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுத்து வருகின்றனர்.  எனது அமைச்சும் இந்த துறையை ஊக்குவிப்பதற்காகவும், கைத்தறி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் செயற்படுகின்றது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் பண்டாரநாயக்க ஞாபகார்த சரவதேச மாநாட்டு மண்டபத்தில்   இடம்பெற்ற வருடாந்த சர்வதேச கைத்தறி கண்காட்சி மற்றும் விருது வழங்கும் “ரன் சலு” நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பதியுதீன் மற்றும் பல கைத்தறி தயாரிப்பாளர்கள.; கலந்துக்கொண்டனர். மேற்படி இந்நிகழ்வில் கைத்தறித் துணி பயிற்சி நிலையத்தின் 105 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  தபால் திணைக்களம் இலங்கை கைத்தொழில்களுக்கான கௌரவத்தை கொடுத்து அத்துறையினனை ஞாபகமூட்டுவது ஊடாக கைத்தறிக்கான முதல் நினைவு தபால் முத்திரை வெளியீட்டை விநியோகித்தது.

இங்கு அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை எங்கள் கைத்தறித் துறைக்கு பங்களித்த கைத்தறி தயாரிப்பாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை கைத்தறித் துறைக்ளுக்கான கௌரவத்தை கொடுத்து அத் துறையினை ஞாபகமூட்டுவது ஊடாக ஒரு நினைவு தபால்  முத்திரையை வழங்குகிறோம். 1990 ஆண்டு தொடக்கம் இலங்கையின் கைத்தறித் துறை பின்னடைவு மற்றும் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும், பல அரசு முயற்சியாளர்கள், வெற்றிகரமாக இந்த துறைகளை புதுப்பித்துள்ளன. இன்று பல இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். தற்போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட அனைத்து கைத்தறி தயாரிப்புகளும் வேகமாக விற்பனையாகி வருகின்றன குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். பெரும்பாலான விற்பனை வருவாய்கள் இலங்கை கொள்வனவாளர்களிடமிருந்து பெறப்படுகின்றது. எஞ்சிய வருமானம் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வருகின்றது. கைத்தறி தயாரிப்புகளுக்கு ஏனைய முன்னணி மாகாணங்களான மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் தமது தயாரிப்புகள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுத்து வருகின்றனர்.  எனது அமைச்சும் இந்த துறையை ஊக்குவிப்பதற்காகவும், கைத்தறி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் செயற்படுகின்றது.  கைத்தறி தயாரிப்பாளர்களில் 70மூ சதவீதம் பெண்களாவர். எனவே, இந்தத் துறையை வலுப்படுத்துவது கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான வழியாகும். இந்தத் துறை அரசாங்கத்தின் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு ஒரு பங்களிப்பாகும். கைத்தறி தயாரிப்பாளர்கள் தங்கள் உற்பத்திக்கு உயர் தரமான வர்ணமயமான நூல் வகைகளை பயன்படுத்துகின்றனர். இவை விலையுயர்ந்தவை. கைத்தறித் துறைக்கு குறைந்த விலை சாயங்களை தயாரிக்கும் திட்டத்தில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். வட மத்திய மாகாணத்தில் கைத்தறி சாயம் மற்றும் வர்ணத்திற்கான  நவீன தொழில்நுட்பத்துடனான மையமொன்றை நிறுவுவதில் நாங்கள் செயற்படுகிறோம். இருப்பினும், இத்துறை சிறப்பானது அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியம். பத்து வருடங்களுக்கு பின்னர், இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்களை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்பியுள்ளோம். சேலத்தில் அமைந்துள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிலையத்திற்கு 35 இலங்கை கைத்தறி கைவினைஞர்களை பயிற்சிக்கு நாங்கள் அனுப்பினோம். இந்த பயிற்சி ஊடாக, புதிய சந்தை போக்குகள்  அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது சிறப்பம்சமாகும். எங்கள் அமைச்சின் இத்தகைய “ரன் சலு” விருதுகள் இந்த துறையின் சாதனையாளர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்துகின்றது என்றார் அமைச்சர்.

 

 

Related Post