Breaking
Tue. Mar 18th, 2025

சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஏஎன்-32, இன்று காலை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. போர்ட்பிளேயருக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தின் தகவல் தொடர்பு காலை 8.40 – 9 மணிக்கு துண்டிக்கப்பட்டு விமானம் மாயமாகி உள்ளதாக அறிவிக்கபடுகிறது.

நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தில் 29 விமானப்படை வீரர்கள் பயணித்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக 8.12 மணிக்கு ராடர் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்ககடலுக்கு மேலே சென்ற போது விமானம் மாயமாகியுள்ளது.

மாயமான  விமானத்தை தேடும் பணியில் கடற்படை, விமானப்படை ஈடுபட்டுள்ளது.

குறிப்பிட்ட விமானம் ரஷ்ய தயாரிப்பு ஆகும்.

By

Related Post