அஸ்ரப் ஏ சமத்
முஸ்லீம் மாணவர்கள் நூற்றுக்கு 51வீதமாண மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுணாகளாகவும்;, பாதையோர வியாபாரிகளாகவும், அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளராகச் செல்கின்ற நிலைமையை நாம் அவதாணிக்க முடிகின்றது.
இந்த நாட்டில் 3 இலட்சத்து 16ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 13ஆயிரம் முஸ்லீம் ஆசிரியர்கள் உள்ளனர். 1ஆசிரியருக்கு 24 மாணவர்கள் என்றரீதியில் உள்ளனர். முஸ்லீம்களது பல்கலைக்கல்வியில் 6வீதம் மாணவர்களே உயர்தரம் சித்தியடைகின்றனர். 300 முஸ்லீம் பாடசாலைகள் இந்த நாட்டில் உள்ளன. என அமைச்சர் கபீர் காசீம் தெரிவித்தார்.
முஸ்லீம் கல்விமாநட்டின் 50 வது நிறைவு விழா நேற்று கொழும்பு தபால் நிலைய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு முஸ்லீம் கல்விமாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஹூசைன் ;இஸ்மாயில் நடைபெற்றது. பேராசிரியர் எம். எஸ் அனஸ்,செயலாளர் சட்டத்தரணி ரசீத்.எம். இம்தியாஸ், கலாநிதி உவைஸ் அகமட் ஆகியோருடன் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசீம் கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், முன்னாள் செனட்டர் மசுர் மொளலானா, ஓய்வு பெற்ற நீதிபதி யு.எல்.ஏ மஜீட், கலாநிதி உவைஸ் அகமட், செயின் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கபீர் காசீம்
கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் உள்ள முஸ்லீம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பிரபல அரச பாடசாலைகளில் அனுமதி கிடைப்பதில்லை. இதனால் பாரிய பிரச்சினைகளை முஸ்லீம் பெற்றோர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அனுமதி கிடைக்காமலினால்; சர்வதேச பாடசாலைகளில் தமது பிள்ளைகளை அனுமதிக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் இன ரீதியாக செயற்பாடுகளை கட்டுப்படுத்தி ஜக்கியமாக வாழ்வதற்கு அவர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து செயற்படுகின்றனர். கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்ப்பதற்கு பல்வேறு குழுக்கள் செயல்பட்டன.
இந்த நாட்டில் தமிழ் மொழி முலம் 40ஆயிரம் ;ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் முஸ்லீம் பாடசாலைகளில் முக்கிய பாடவிதானங்களுக்கு முஸ்லீம் ;ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுகின்றது.
கடந்த காலத்தில் முஸ்லீம்களது பல தலைவர்கள் முஸ்லீம்களது கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பாரிய சேவைகளை இந்நாட்டுக்கும் சமுகத்துக்கும் சேவை செய்துள்ளனர். அதே போன்று சிங்கள மண்னர்கள் காலத்தில் கூட முஸ்லீம்கள் ஆலேசகர்களாகவும், வைத்தியம் செய்பவர்கள், வெளிநாடுகளில் தூதுவர்களாகவும் செயல்பட்ட வரலாறு இந்த நாட்டில் உள்ளது.