Breaking
Mon. Dec 23rd, 2024

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியானஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர்கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும்அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேடபோதைபொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

By

Related Post