Breaking
Fri. Nov 15th, 2024
 – காரைதீவு  நிருபர் –
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எச்எம்.பாறுக் தனது 31வருடகால கல்விச்சேவையிலிருந்து   19ஆம் திகதி திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுவதையொட்டி   பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
காலை ஆராதனையில் பாடசாலையில் பயிலும் சுமார் 400மாணவர்களின் மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. காலைநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் வரவேற்புடன் ஆசிரியர்களால் மாலைகள்சூட்டப்பட்டு ஆராதனை மேடைக்கு அழைத்துவரப்பட்டார்.
அங்கு ஆசிரியர்கள் மற்றும் வலயக்கல்விப்பணிமனை சார்பில் கலந்தகொண்ட உதவிக்கல்விபப்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர். ஆசிரியர்களால் பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.
மதியம் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் பிரியாவிடை வைபவம் ஆராதனை மண்டபத்தில் புதிய அதிபர் ஜனாபா மகராசி ஜெயினுலாப்தீன் தலைமையில் இடம்பெற்றது..
இதேவேளை முதல்நாளிரவு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் பாராட்டும் பிரியாவிடை வைபவமும் சங்கச் செயலாளர் எ.எ.சலீம் தலைமையில் நடைபெற்றது.
வரலாறு.
வர்த்தகப் பட்டதாரியான பாறூக் 1984இல் கல்முனை கார்மேல் பற்றிமாக்கல்லரியில் அசிரியராக இணைந்து 1989இல் அதிபர்சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு கல்முனை சாகிறாக்கல்லுரியில் பிரதி அதிபரானாhர். புpன்னர் 1997இல் சம்மாந்துறை முஸ்லிம் தேசியகல்லுரியின் அதிபராக கடமையேற்றார். இலங்கை கல்வி நிருவாகசேவைக்குள் தெரிவாகி இருவருடகாலம் சம்மாந்துறை வலயக்கல்விக்காரியாலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 15வருடகாலம் அதிபராகவிருந்து இன்றுடன் ஓய்வுபெறும் பாறூக் ஒரு சிறந்த கவிஞருமாவார்.

By

Related Post