Breaking
Mon. Dec 23rd, 2024

துருக்கியில் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானினால் உருவாக்கப்பட்ட ஆளும் ஏ.கே. கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது. தனது கட்சி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி எதிர்துகான் வாக்குறுதி அளித்துள்ளார். துருக்கியின் ஆட்சியாளர்கள் துருக்கியை சீரழித்து கொண்டிருந்த நிலையில் நிண்ட காலத்திர்கு பிறகு துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அவர்கள் மீண்டும் துருக்கியில் ஒரு இஸ்லாமிய சூழலை உருவாக்கினார்

ரஜப் எர்துகான் அதிபராக உயர்ந்து விட்டாலும் அவரது கட்சி கடந்த தேர்தலில் குறைவான முறையில் வெற்றி பெற்றதால் ஒரு நிலையில்லாத ஒரு அரசே துருக்கியில் அமைந்திருந்தது இந்த நிலையை மாற்றுவதர்காக ரஜப் எர்துகான் மீண்டும் துருக்கியை தேர்தலை நோக்கி அழைத்து சென்றார்.

நடந்து முடிந்த தேர்தலில் துருக்கி அதிபரின் நீதி கட்சி பெருபாண்மையான ஆசானங்களை வென்று ஒரு நிலையான ஆட்சிக்கு வழிவகுத்திருக்கிறது. ரஜப் எர்துகானின் கட்சி அறுதி பெருபாண்மையை பெற்றிருப்பதின் மூலம் அங்கு இஸ்லாமிய சீர்திருத்தங்கள் மேலும் முழு வீச்சுடன் மேர்கொள்ளபடும் என்று நீதி கட்சி தெரிவித்துள்ளது

By

Related Post