தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாளை நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று நாட்டுக்கு பெறுமை சேர்ப்பதுடன், தங்களது பாடசாலைக்கும் கற்றுத்தந்த ஆசிரியருக்கும் தங்களது பெற்றொருக்கும் பெருமை சேர்க்கும் வகையில், உங்களது பரீட்சை முடிவுகள் வெளிவர பிராத்திக்கின்றேன்.
அத்தோடு கல்வியில் எனது மாவட்டம் சிறந்து காணப்பட வேண்டும் என்று ஆசைப்படும் அரசியல்வாதி என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றும் மாணவர்கள் சிறந்த முறையில் சித்தி பெற்று தேசியத்தில் முதலிடம் பெற்று, மாவட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்றும் இச் சந்தர்ப்பத்தில் மாணவ செல்வங்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு, மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்-