பாரிய அனகொண்டா பாம்பொன்று பிரேஸிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 33 அடிகளாகும்.
பிரேஸிலின் வட பிராந்தியத்திலுள்ள பாரா மாநிலத்தில் அணைக்கட்டு நிர்மாண நடவடிக்கையின்போது இந்த அனகொண்டா கண்டு பிடிக்கப்பட்டது. அணைக்கட்டை நிர்மாணிப்பதற்காக குகையொன்றை நிர்மாண ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்த போது இப் பாம்பு வெளிவந்ததாக கூறப்படுகிறது.
இந்த அனகொண்டா 63 தொன் எடையைக் கொண்டிருந்தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடிகளாகும். உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இப் பாரிய அனகொண்டா பிடிக்கப்பட்டதும் நிர்மாண ஊழியர்கள் சங்கிலிகளால் பாரம் தூக்கி (கிரேன்) ஒன்றுடன் கட்டி வைத்தனர். இந்த அனகொண்டா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த அனகொண்டாவை அதன் காட்டில் வசிப்பதற்கு அனுமதிக்காமல் கொன்றுவிட்டமை குறித்து பலர் விமர்சித்துள்ளனர்.