Breaking
Tue. Nov 26th, 2024

-ஊடகப்பிரிவு-

தற்போது நாட்டில் பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துகொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்று வருகிறது. இந்த நியமணம் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கவுள்ள நிலையில், 35 – 45 வயதுக்கிடைப்பட்ட பாட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருக்கும், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கும்  இடையில், அலரிமாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற சந்திப்பின் போதே, இது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் 35 – 45 வயதுக்கிடைபட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளினூடாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதியளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பியை  சந்தித்த திருகோணமலை மாவட்ட மற்றும் கிழக்கு மாகண 35 – 45 வயதுக்கிடைப்பட்ட பாட்டதாரிகள், அவர்களினுடைய கோரிக்கைகள்மற்றும் பட்டதாரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கியிருந்தனர்.

35 – 45 வயதுக்கிடைப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

=========================

தற்போது நாட்டில் பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துகொள்வதட்கான நேர்முகபரீட்சை நடைபெற்றுவருகிறது அந்நியமணம் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கவுள்ள நிலையில்.

35 – 45 வயதிட்கிடைபட்ட பாட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்குமிடையில் அலரிமாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இது குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் 35 – 45 வயதிட்கிடைபட்ட வேலையற்ற பாட்டதாரிகள் தொடர்பாக விசேட அமைச்சரவை பத்திரம் தயாரித்து பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிநூடாக நடவடிக்கை எடுப்தாக பிரமர் வாக்குறுதியளித்தார். ,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை சந்தித்த திருகோணமலை மாவட்ட மற்றும் கிழக்கு மாகண 35 – 45 வயதிட்கிடைபட்ட பாட்டதாரிகள் அவர்களினுடைய கோரிக்கைகள் , 35 – 45 வயதிட்கிடைபட்ட பாட்டதாரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கியிருந்தனர்.

35 – 45 வயதிட்கிடைபட்ட பாட்டதாரிகள் நியமனம் வழங்க தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் வலியுறுத்திவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Post