Breaking
Thu. Jan 9th, 2025

அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்பட்ட புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரூமான அப்துல்லா மஹரூம் தெரிவித்தார்.

புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து மக்கள் பாவனைக்கு இன்று (10) கையளித்து விட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்.
துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் அபிவிருத்திகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதன் மூலமாக மிக விரைவான திட்டங்கள் ஊடாக நடை முறைப்படுத்தப்படவுள்ளது. பாரியளவிலான திட்டங்களை கல்வி,சுகாதாரம் போக்குவரத்து சுற்றுலாத் துறை என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன இதற்காக தனது பூரண ஒத்துழைப்புடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம் பல மில்லியன் ரூபாய்க்களில் பல திட்டங்களை அபிவிருத்திக்காக செய்துள்ளோம் எதிர்வரும் காலங்களிலும் செய்வதற்கான சகல வித முன்னாயத்தங்களும் இடம் பெற்று வருகின்றன.  மாகாண சபைத் தேர்தலை விரைவில் எதிர்நோக்கவுள்ளோம் சரியான திட்டங்களை வகுத்து மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும் .

சரியான வழிகாட்டல்கள் ஊடாக கிராமிய அபிவிருத்தி துரிதமாக இடம் பெற வேண்டும் அபிவிருத்திகளில் கிராமங்கள் அதிகமாக உள்வாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் இன்றைய ஜனநாயகப் பாதுகாப்பூக்கான அண்மையான போராட்டத்தில் நானும் எனது தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களும் முழு மூச்சாய் நின்று போராளியாக செயற்பட்டேன்.

மீள்குடியேற்ற அமைச்சு மீள் குடியேற்ற செயலனி ஊடாக பல முன்னெடுப்புக்கள் இப் பகுதியில் இடம் பெறவுள்ளன .மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்க பல துரிதமான திட்டங்களை துரிதப்படுத்தி சமூக எழுச்சிக்கான போராட்டமாக அமைய வேண்டும் . மாகாண சபை தேர்தலில் தங்களுடைய நியாயங்களை உறுதிப்படுத்தி அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் என்றார்.

Related Post