Breaking
Tue. Dec 24th, 2024

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி மல்சரா மண்டபத்தில் நேற்று மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக் கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறைமுகங்கள், கப்பல்துறை பிரதி அமைச்சருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார்.

சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் சுபைர்தீன் , களுத்துறை நகரசபை உறுப்பினர் ஹிஷாம் சுகைல், பேருவளை பிரதேச சபை உறுப்பினர் பொறியியலாளர் ஹஸீப் மரைக்கார் , அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பாராளுமன்ற விவகார செயலாளர் அல்ஹாஜ் ஏ. ஆர்.எம்.ஜிப்ரி -ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரி ஸாஹிர் அன்சாரி அவர்களும் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

கிளைகளின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

Related Post