அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் இஜாஸ் அவர்களின் தலைமையில் நேகமயில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர்கள் மத போதகர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட இஷாக் ரஹுமான் பெவிலியன் என்பனவும் திறந்து வைக்கப்பட்டது.