Breaking
Mon. Dec 23rd, 2024

புறக்கோட்டையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நான்கு பேரே இவ்வாறு திருடிச் சென்றுள்ளனர்.

அங்கு வேலை செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர்.

அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி அவர்களிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாயையும், கடவுச்சீட்டுகளையும் அக்குழுவினர் அபகரித்துச்சென்றுள்ளனர்.

இந்தத் தங்க நகை ஆபரண பட்டறையில் வேலைசெய்வோரில் பலர், இந்தியப் பிரஜைகள் என்று அறிய முடிகின்றது.

By

Related Post