Breaking
Thu. Jan 9th, 2025

குருநாகல் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் மடலகம தேர்தல் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வும் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துறையாடலும் நேற்று (08) முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீனின் ஏற்ப்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி . இர்பான் , குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான அஸார்தீன் மெய்னுதீன் , குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், குருநாகல் மாவட்ட கல்வி பொறுப்பாளர் ரியாஸ் மௌலவி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மவத்தகம முன்னால் அமைப்பாளரும் தற்போதைய மக்கள் காங்கிரஸ் உறுப்பினருமான முஆத் பாரூக் , ஸரூக் மௌலவி, மற்றும் பொல்கஹவெல மத்திய குழு உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸ் மடலகம ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் வட்டாரங்களுக்கு கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் 40 இலட்சம் ரூபாய் நிதயொதுக்கீட்டில் சுயதொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பான பல விடையங்கள் கலந்துறையாடப்பட்டன.

-றிம்சி ஜலீல்-

Related Post