Breaking
Mon. Dec 23rd, 2024
Russian Foreign Minister Sergei Lavrov attends a news conference after a meeting with his Finnish counterpart Erkki Tuomioja in Moscow, April 15, 2013. REUTERS/Sergei Karpukhin

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, இலங்கைக்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கு வரும்போது, இருதரப்பு உடன்பாடுகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடவுள்ளதுடன், கொழும்பில் புதிய ரஷ்ய தூதரகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் 1972ம் ஆண்டு தொடக்கம், 1976ம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள சோவியத் ஒன்றியத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர் என்பதும், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையிலேயே ரஷ்ய வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Related Post