4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கிய லோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சார கூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின் பதவிநீக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த பிரச்சாரத்தையே நாங்கள் முன்னெடுக்கிறோம், சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறைiயின் சுதந்திரத்தையும் மீண்டும் ஏற்படுத்த விரும்புகின்றோம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.(gtn)