Breaking
Fri. Nov 22nd, 2024

ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இலங்கை தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சுமார் 42 வரு­டங்­க­ளுக்கு பிறகு அழைப்பு கிடைக்­க­பெற்­றுள்­ளது. இதன்­படி அந்த நாட்டு அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்று அடுத்த மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜேர்­ம­னுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்தின் சீரான வெளி­நாட்டுக் கொள்­கையின் கார­ண­மாக ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இந்த அழைப்பு கிடைக்­க­ப்பெற்­றுள்­ளது.

ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு பின்னர் அபி­வி­ருத்தி அடைந்து வரும் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு அழைப்­புகள் கிடைக்­க­ப்பெற்ற வண்­ண­முள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இலங்­கைக்கு மதிப்­ப­ளித்து ஜேர்மன் அர­சாங்­கத்­தினால் விடுக்­கப்­பட்ட அழைப்­பினை ஏற்று தான் அடுத்த மாதம் ஜேர்­ம­னுக்கு விஜயம் செய்­ய­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post