Breaking
Mon. Dec 23rd, 2024

1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும்.
அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்­பிலும் விசா­ரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு ஒன்றை கைய­ளித்த­தாக புத்­தி­ஜீ­வி­களின் குரல் அமைப்பு தெரி­வித்­தது.
கொழும்பில் வியா­ழக்­கி­ழமை அவ்­வ­மைப்பு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அதன் இணைச்­செ­ய­லாளர் சட்­டத்­த­ரணி தினேஷ் தொடம்­கொட இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
கடந்த 1976ஆம் ஆண்டு முதல் விடு­த­லைப்­பு­லி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள், கொலைகள் மற்றும் அழி­வுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­டொன்றை கைய­ளித்­துள்ளோம்.
அதில் விடு­த­லைப்­பு­லி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட 18 வகை­யான அநி­யா­யங்கள் தொடர்பில் குறிப்­பிட்­டுள்ளோம். குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக யுத்தம் புரிந்­தமை, மனி­தப்­ப­டு­கொலை, பொது­மக்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள், மனித வெடி­குண்­டு­களைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள், சிறு­வர்­களை இணைத்துக் கொண்­டமை, யுத்­தக்­கை­தி­களைக் கொலை செய்­தமை மற்றும் கடற்­கொள்ளை போன்ற 18க்கு மேற்­பட்ட பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு விடு­தலைப் புலிகள் பொறுப்புக் கூற வேண்டும்.
அதே­போன்று இலங்­கையின் சட்­ட­திட்­டத்­திற்­க­மைய எந்­த­வொரு குற்றச் செய­லுக்கும் உத­வி­பு­ரி­வதும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதும் சதித்­திட்டம் தீட்­டு­வதும் அநி­யா­ய­மாகும். ஆகை­யினால் இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பூரண விசா­ரணை ஒன்றை மேற்­கொள்­ளு­மாறு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்ளோம்.
மேலும் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் 16 அமைப்­புகள் மற்றும் 2014 ஆம் ஆண்டு வர்த்­த­மா­னியில் பெயர், முக­வ­ரி­யுடன் பிர­சு­ரிக்­கப்­பட்ட 424பேர் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் எனவும் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்ளோம்.
அத்­துடன் இவர்­களில் சிலர் வெளி­நா­டு­களில் இருந்தால், ஐக்­கிய நாடுகள் பாது­காப்­புச்­ச­பை­யுடன் 2001ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் அதா­வது ஐக்­கிய நாடு­களில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள எந்­த­வொரு நாடும் பயங்­க­ர­வாதம் தொடர்பில் விசா­ரணை நடத்தும் போது அதற்கு அங்­கத்­துவ நாடுகள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்ற இணக்­கப்­பாட்டின் பிர­காரம் வெளி­நா­டு­களில் உள்ள விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் சம்­பந்­த­மாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு சர்வதேசத்திடம் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே சர்வதேசமும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்காக எங்களிடம் ஒப்படைக்கும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

By

Related Post