துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை 1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ ஜூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
இந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது.இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு வெளிப்படுவதால் தொடர்ந்து அங்கு தீ ஜூவாலை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.உலகில் மிகப்பெரிய அளவில் இங்கு எரிவாயு வளம் உள்ளது.
இயற்கையால் தோற்றுவிக்கபட்ட ஒரு அருமையான காட்சியாக அது காணபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.இதை உள்ளூரை சேர்ந்தவர்கள் ”நரகத்தின் நுழைவு வாயில்” என அழைக்கிறார்கள். துர்க்மெனிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 50 நாடுகளை சேர்ந்த 12 முதல் 15 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்கள் இந்த நரகத்தின் நுழைவுவாயிலை பார்வையிட்டு செல்கின்றனர்
கனடாவை சேர்ந்த சாகசக்காரர் ஜார்ஜ் கவுருனிஸ் ஒருமுறை அந்த துலை பகுதியில் நடந்து சில மண் மாதிரிகளை எடுத்துள்ளார்.
துர்க்மெனிஸ்தான் அரசு அந்த பகுதியில் ஆய்வு நடத்தி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான திடங்களை நிறைவேற்றி வருகிறது.துர்க்மென்ஸ்தான் அரசு அடுத்த 20 ஆண்டுகளில் இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் அலவை உயர்த்தி 75 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான்,ரஷ்யா, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்ய திட்டமிட்டு உள்ளது.