Breaking
Sun. Dec 22nd, 2024

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 5 வயதான  சிறுமியின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post