Breaking
Wed. Dec 25th, 2024

இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ம் திகதி மூடப்படும் எனவும் 2015 ஆம் ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 5 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை ஏப்ரல் 8 ஆம் திகதிவரை இடம்பெறும்.

முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக 5 ஆம் திகதி மூடப்பட்டு 2015 முதலாம் தவணை ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு ஏப்ரல் 10 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

2014 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post