Breaking
Tue. Dec 24th, 2024

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி சுரங்கமாகவும் அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துரையாடியுள்ளார்.

ஏற்கனவே, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைத் தரைவழிப் பாதைகளால் இணைக்கும் 8 பில்லியன் டொலர் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 5.19 பில்லியன் டொலர் செலவிலான இந்திய – இலங்கை தரைவழிப்பாதை இணைப்புத் திட்டத்துக்கு உதவ ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Related Post