Breaking
Mon. Dec 23rd, 2024

இங்கிலாந்தில் உள்ளது ஸ்காட்லாந்து. அங்கு கன்னா என்ற ஒரு குட்டித் தீவு உள்ளது. அதன் மக்கள் தொகை 26 பேர் தான். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடப்பதில்லை. எனவே, இங்கு போலீஸ் நிலையம் எதுவும் இல்லை.

கடந்த 1960–ம் ஆண்டில் இங்குள்ள குரு தேவாலயத்தில் ஒரு மரப்பலகை திருட்டு போனது. அதை திருடியவர் யார் என இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் 55 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சமீபத்தில் ஒரு சபையில் கொள்ளை நடந்துள்ளது. இங்கு மெக்கேப் என்பவர் கடை நடத்தி வருகிறார். அவரது கடையை உடைத்து அங்கிருந்த இனிப்பு பண்டங்கள், மளிகை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம். இக்கடையை ஸ்டீவர்ட் கான்னர் என்பவருடன் சேர்ந்து மெக்கேப் நடத்தி வந்தார்.

இந்த கடை வழிப்போக்கர்களுக்காக இலவச WiFi-க்காவும் டீ, காபி குடிப்பதற்காகவும் எப்போதுமே திறந்தே இருக்கும். மிகக் குறைவானவர்களே தீவில் தங்கி இருப்பதால் வீடுகளையும் இவர்கள் பூட்டாமல் இருந்தவர்கள் இனிமேல் பூட்டு போட போகின்றார்களாம்.

கடையில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் தாங்கள் திவாலாகி விட்டதாக வருத்தத்துடன் கூறினர். இந்த கொள்ளை குறித்து விசாரிக்க ஒரு போலீஸ் அதிகாரி அங்கு சென்றுள்ளார்.

Related Post