Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கைப் போக்குவரத்து சபைக்காக இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து 500 பஸ்கள் கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டின் ஊடாக குறித்த பஸ்களை சிறிது சிறிதாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் எனினும் அது இதுவரை சாத்தியப்படாததால் அமைச்சர் குறித்த பஸ்களை ஒரே சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களது ஈ.பீ.எப் மற்றும் ஈ.டீ.எப் பணங்கள் உள்ளிட்டவை செலுத்தாமல் நிலுவையில் கிடக்கும் நிலையில் இவ்வாறு 500 கோடி ரூபாய் செலவில் பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

இதேவேளை, தன்னால் முன்னெடுக்கபட்டுள்ள பஸ் கொள்வனவு சம்பவத்திற்கு எவரேனும் எதிர்ப்பை வெளியிட்டால் தான் அமைச்சுப் பதவியை துறக்கவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

By

Related Post