Breaking
Mon. Dec 23rd, 2024

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனக்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை (7) வழக்கு தாக்கல்செய்துள்ளார்.

பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் இல்லையேல் வண.கலகொட அத்தே ஞானசார தேரரிடம் ரூபா 500 மில்லியன் நட்ட ஈடாக கோரப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தனது சட்டத்தரணியால் அனுப்பட்ட கடிங்களுக்கு வண.கலகொட அத்தே ஞானசார தேரர் பதில் ஒன்றும் அனுப்பமையினால் இந்த வழக்கு அவருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 மார்ச் 20 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களிலோ வண.கலகொட அத்தே ஞானசார தேரர், ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சருக்கு எதிராக தீங்கு விளைவிக்கககூடிய பொய்யான மற்றும் அமைச்சரின் நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கககூடிய கூற்றுக்களை தேரர் வெளியிட்டதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாநாட்டில் தேரர் அமைச்சருக்கு எதிராக பின்வரும் கூற்றுக்ளை முன்வைத்தார்.

1. வில்பத்து தேசிய சரணாலயம் அழிவடைதற்கு அமைச்சர் காரணமாக இருந்தார்.

2. வில்பத்து தொடக்கம் மன்னார் வரை முஸ்லீம் மக்களுக்கென தனியான வலயம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

3. இலங்கையில் மன்னார்- வில்பத்து பிரதேசத்தில் அராபிய குடியேற்றம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அமைச்சர் முயலுகின்றார்.

4 அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றங்களை தாக்கி நீதித்துறை செயற்பாடுகளை தடுக்கும் ஒரு நபர் ஆவார்.

அமைச்சருக்கு எதிராக தேரரினால் கூறப்பபட்ட கருத்துக்கள் அமைச்சரி ன் நற்பெயருக்கும் புகழுக்கும் தீங்கு விளைவித்துள்ளமையினால் தேரரிடமிருந்து ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (07-05-2014)

Related Post