Breaking
Sun. Dec 22nd, 2024
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில திருமணம் முடிப்பதாக ஏமாற்றி ஒரு யுவதியை சீரழித்திருப்பதாகவும், இரும்பு விற்பனை தொடர்பான முறைகேடு ஒன்றில் தொடர்பு இருப்பதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சாட்டியிருந்தார்.
இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்த கம்மன்பில, ஹிருணிக்கா பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
எனினும் ஹிருணிக்கா அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஹிருணிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கேற்பட்ட மானநஷ்டத்துக்கு ஈடாக ஹிருணிக்கா ஐநூறு மில்லியன் ரூபா நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post