கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம் 504 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திறமையற்ற நிர்வாகமே இந்த நட்டத்திற்கு காரணம் என்றும், தபால் திணைக்களத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திறமையான நிர்வாகத்தினைக் கொண்டு தபால் துறையினை கட்டியெழுப்புவது தற்போதய ஆட்சியின் கடமை என்றும் குறித்த தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.