பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என எல்லாவற்றின் விலைகளும் குறைந்திருக்கும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் ‘0’ சதவீதத்தை விட குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. ஆனால், பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரையில் அங்கு கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 0 சதவீதமாக இருந்தது. கடந்த 1960-க்கு பிறகு முதல்முறையாக கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் நெகட்டிவ்வாக வந்துள்ளது. குறிப்பாக, விமானம் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் கட்டணங்கள் குறைந்துள்ளன. தொடர்ந்து பணவாட்டத்தின் விகிதம் பிரிட்டனில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு பணவாட்டம் அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.