Breaking
Sat. Jan 11th, 2025

தெல்லிப்பழை சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டாக்காலி நாய் ஒன்று 6 பேரைக் கடித்து காயப்படுத்தியது.

இதனையடுத்து குறித்த 6 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களை கடித்த அந்த நாய் இறந்துள்ளது. இதனால் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைத்தனர்.

கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாய்க்கு விலங்கு விசர்நோய் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post