Breaking
Sun. Dec 22nd, 2024

இந்­திய ஜார்கண்ட் மாநி­லத்தில் சிறு­வ­னொ­ருவன் 6 வரு­டங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வரு­கிறான்.

ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகு­தியில் வசிப்­பவர் சுபேந்தர் சிங், இவ­ரு­டைய மனைவி பிங்கி குமாரி.

மகன் மொகித் குமார் (6). இந்த மொகித் குமா­ர் அவ­னு­டைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வரு­கிறார்.

இந்த சிறு­வனின் இந்த செயலை நிறுத்த பெற்றோர் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுத்தும் நிறுத்த முடி­ய­வில்லை. இதனால் அந்த சிறு­வன் பாட­சா­லைக்கு அனுப்­பப்­ப­டா­மல் வீட்­டி­லேயே உள்ளான்.

இது­கு­றித்து சிறு­வனின் தாய் கூறும்போது, மொகித் வீட்டிலிருந்து வெளியே விளை­யாடிக் கொண்­டி­ருந்தான். அப்­போது அங்கு நாய் ஒன்று வந்­தது. அந்த நாயின் அருகில் சென்று அவன் அந்த நாயிடம் பால் குடிக்க ஆரம்­பித்தான்.

அந்த நாயும் அவ­னுக்கு ஒத்­து­ழைத்­தது. எப்­போ­தெல்லாம் அவ­னுக்கு வாய்ப்பு கிடைக்­கி­றதோ அப்­போ­தெல்லாம் அவன் இந்த செயலில் ஈடு­பட்டான். மொகித்­துக்கு அது பிடித்­தி­ருந்­தது” என்று கூறி­யுள்ளார்.

மேலும், அங்­குள்ள இன்­னொரு நாயிடம் சிறுவன் பால் குடிப்­ப­தற்கு முற்­பட்­ட­போது, அந்த நாய் அவனை கடித்­துள்­ளது.

அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். நாய் ­க­டிக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

ஆனால் இந்த பழக்­கத்தை மாற்ற எந்த சிகிச்­சையும் அளிக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறி­யுள்ளார்.

“நாய் பால் குடிப்­பதால் ஒரு தீங்கும் ஏற்­ப­டாது, ஆனால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்” என டாக்டர் டி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

By

Related Post